Story with Rk nagar

வாங்க சார்! என்ன வேணும் ?

ஃபிரிட்ஜ் வேணும்

என்ன ரேட்ல சார் வேணும் ?

12 ல இருந்து 15 ஆயிரத்தில்

இந்தா இருக்கு பாருங்க சார்

இதையே எடுத்துக்கிறேன்... ஆனா என்கிட்டே 1300 ரூபாய்தான் இருக்கு.

பரவாயில்ல சார்! இன்ஸ்டால் மெண்ட்ல கட்டலாம் சார். நீங்க என்ன வேலை பார்க்கிறிங்க?

இப்போதைக்கு வேலை இல்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன். ஆனா அடுத்த மாதம் ஃபுல்லா செட்டில் பண்ணிருவேன்.

என்ன சார் நீங்க! பணமும் இல்லை, வேலையும் இல்லை, உங்களை நம்பி எப்படி சார் கொடுக்கிறது.

சார் எங்க வீட்டில 6 பேர் இருக்கோம்.
நான் இருக்கிறது ஆர் கே நகர் தொகுதி.

என்னாது! ஆர் கே நகர் தொகுதியா! இதை வந்தவுடனே சொல்லக்கூடாதா சார்...  முதல்ல உக்காருங்க சார்!

ஃபிரிட்ஜ் மட்டும் போதுமா...  இல்லை
வேற ஏதாவது வேணுமா சார்

இப்போதைக்கு இது போதுங்க... அடுத்து பொது தேர்தல் வரும்போது...

ஓ கே சார்! 
டேய் தம்பி...  சாருக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வா! -யாரோ! 😉

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்