அஜித்துக்கு அன்புசெழியனால் நடந்தது என்ன?

பிதாமகன் படத்திற்கு பிறகு பாலா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க ஏ.எம்.ரத்தினம் தயாரிக்க இருந்த படம் நான் கடவுள். ஆனால் தொடர் தோல்விகளை சந்தித்த ஏஎம் ரத்தினம் அந்த படத்திலிருந்து விலகிக்கொண்டார். அஜித் நூற்றைம்பது நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு பாலாவுக்காகக் காத்திருந்தார். ஆண்டுகள் ஓடினவே தவிர ஒரு முன்னேற்றமும் இல்லை.
முகத்தை மறைக்கும் அளவிற்கு நீண்ட முடியை வளர்த்துக் கொண்டு அஜித் காத்திருந்தார். இத்தனைக்கும் அவருக்கு கதைகூட சொல்லவில்லை பாலா. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன அஜித் பி.வாசு இயக்கத்தில் பரமசிவன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். நான் கடவுள் படம் இனி நகரவே நகராது என முடிவு செய்த அஜித் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது பாலாவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் அஜித் நடித்தால்தான் அந்த படம் எடுபடும் என்பதில் உறுதியாக இருந்தார். பல முனைகளில் இருந்து அஜித்துக்கு அழுத்தம் தரப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பாலாவுக்காக காத்திருந்த வெறுப்பு, அவர்களது வொர்க்கிங் ஸ்டைல் எதுவுமே பிடிக்காததால் அந்த படமே வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார் அஜித். வாங்கிய அட்வான்ஸையும் எப்போது வேண்டுமானாலும் திருப்பி தந்துவிடுவதாகக் கூறிவிட்டார்.
கடைசியாக ஒரு முறை இந்தப் பஞ்சாயத்தைப் பேசிவிடலாம் என அஜித்தை பாம்குரோ ஹோட்டலுக்கு வரவைத்தனர். அஜித்தை மிரட்டியாவது இந்த படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதற்காக மதுரையிலுருந்து அன்புச் செழியன் மற்றும் அவரது அடியாட்களை வரவைத்தனர். அந்த பேச்சு வார்த்தையில் பாலாவும் இருந்தார். அஜித்தை சற்று கடுமையான வார்த்தைகளில் மிரட்ட ஆரம்பித்தார் அன்புசெழியன். 'பேசாம இந்த படத்தில் நடிச்சிரு... இல்லன்னா தமிழ் சினிமாலயே இருக்க முடியாது' என எச்சரித்தார்களாம்.
அதுவரை பொறுமையாக இருந்த அஜித், தனது பாண்ட்டிலிருந்து ஒரு ஸ்டைலிஷ் துப்பாக்கியை எடுத்து மேசையின் மேல் வைத்திருக்கிறார். 'வேற வழி தெரியல.... என்ன பண்ணலாம்?' என்றபடி எல்லோரையும் பார்த்தாராம் அஜித். அது லைசென்ஸ் பெறப்பட்ட துப்பாக்கி. தற்காப்புக்காக அஜித்தால் பயன்படுத்த முடியும். அன்புச் செழியன், பாலா உள்ளிட்ட அதனை பேரும் ஆடிப் போய்விட்டார்களாம்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அட்வான்ஸை திரும்ப வாங்கிக்கொண்டு நடையைக் கட்டியிருக்கிறார்கள் அன்புச் செழியன் அண்ட் கோ. அஜித்தை மிரட்டப்போய் அன்புச் செழியன் அண்ட் கோ மிரண்டு வந்த கதை இது!

Comments

Popular posts from this blog

அடிச்சு தூக்கு பாடல் வரிகள் - விஸ்வாசம்

Youtuber Saravana Paramanantham - Review

திருடன் - நல்லவன்