யாரோ ஒருவன் சொன்னான்...? - Tamil best kavithai about me
யார் என்று தெரியவில்லை எனக்கு, அவன் யாரென்று
சொல்வதை சொல்லி ஊரெல்லாம் பரப்பி
நம்பிவிட்டனர் என் பெற்றோர், உறவினர் மற்றும் சுற்றத்தார்
அந்த உண்மையை செல்லி செல்லி எனக்கு அதை நம்ப வைத்துவிட்டனர்
ஆனால், அந்த உண்மை அப்பொழுது மட்டும் தான் உண்மையாக இருந்தது
ஆனால், இன்று முழுவதுமாக அது மாறிவிட்டது
இன்றும் அதை நோக்கி ஓடி, இலக்கை தொட்டோம்
ஆனால் அடைந்தது நான் மட்டும் இல்லை என்னுடன் நிறைய ஆட்டுமந்தைகள்.
சில ஆட்டுமந்தையை மேய்ப்பவன் தன்னை தலைவன் என்று எண்ணி கொள்கிறான்
ஆனால் உண்மையான நாயகன் இப்போது இதை நோக்கி ஓடவில்லை
காலம் செல்லலாம்
யாரும் உன்னோடு இருக்க போவது இல்லை
உன்னோட உதிரம் (மற்றும் உன்னோட அகமும்) தவிர
நீ உன்னை நோக்கி செல்
அதுவே சரியான வழியாகும்
இப்படிக்கு
உங்கள் ....
Comments
Post a Comment